Our Testmonials

What People Say

என் பெயர் மீனா நான் இந்து சமயத்தைச் சார்ந்தவர் எனக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர். எனது கணவரின் குடிப்பழக்கத்தினால் என் குடும்பமே நிம்மதியற்று எப்போதும் சண்டை சச்சரவாக இருந்தது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டார் எங்களை ஏளனமாக பார்த்தனர். என் பெண்ணுக்கும் வரன் அமையவில்லை. ஒருவர் மணலிபுதுநகர் அற்புதக் குழந்தை இயேசு திருத்தலத்தை பற்றி கூற நான் எங்கு வந்து 9 ஆண்டு காலமாக வந்து ஜெபிக்கிறேன். என் கவலைகள் நீங்கி நலமாக வாழ்கிறேன். என் மகளுக்கு திருமணம் நடைபெற்று மாதாமாதம் அவள் கணவருடன் இங்கு வந்து செல்கிறார். அற்புத குழந்தை இயேசுவுக்கு நன்றி.
மீனா – மணலி

சுரேஷ்குமார் நவீனா என்ற நாங்கள் இந்து தம்பதியர் மணலி புதுநகர் அற்புதக் குழந்தை இயேசு திருத்தலத்தில் வேண்டியதாகவும் சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் நடை பயணமாக வந்து குழந்தை பாக்கியத்திற்காக வேண்டியதன் பயனாக எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது மணலிபுதுநகர் அற்புத குழந்தை இயேசுவுக்கு கோடான கோடி நன்றி
நவீன் சுரேஷ்குமார் – புழல்

நான் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஆண் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. மணலி புதுநகர் அற்புத குழந்தை இயேசுவிடம் உருக்கமாக வேண்டிக் கொண்டேன். மீண்டும் கருத்தரித்து அழகான பெண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்ததே தாயும் சேயும் நலம் எங்கள் ஜெபத்தை கேட்டு குழந்தை வரம் கொடுக்க அற்புத குழந்தை இயேசுவுக்கு நன்றி.
சிவசங்கரி

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் குழந்தைக்காக வேண்டினோம். இந்த வருடம் எங்களுக்கு பெண் குழந்தையை  அற்புதக் குழந்தை இயேசு கொடுத்தற்கு நன்றியாக என்று எங்கள் குழந்தையை குழந்தை இயேசுவின் தொட்டிலில் போட்டு நன்றி செலுத்துகிறோம். .
பூர்ணிமா ரமேஷ் தண்டையார்பேட்டை

என் பெயர் ஜெகதீசுவரி எனக்கு பிறந்ததிலிருந்தே இதயநோய் இருந்ததே 18 வயது வரை மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்தேன். எனக்கு திருமணம் செய்யக்கூடாது என்றும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்றும் மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். ஆனால் எனது மாமாவின் மகனை திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருந்தார். நாங்கள் மருத்துவர் சொல்லியும் மற்றவர்களின் விமர்சனங்களுக்கு நடுவிலும் மணலிபுதுநகர் அற்புத குழந்தை இயேசுவிடம் திருமணம் முடித்துக் கொண்டோம்இப்பொழுது எனக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான் நானும் நல்ல உடல் சுகத்துடன் இருக்கிறேன் எங்கள் வாழ்க்கையில் அற்புதத்தையும் அதிசயத்தையும் செய்த அற்புத குழந்தை இயேசுவுக்கு நன்றி நன்றி
ராமமூர்த்தி – சோழவரம்