The Miraculous Prayer to Infant Jesus
Oh miraculous Infant Jesus, we prostrate before your image and beseech you to cast a merciful look on our troubled hearts. let your tender heart, so inclined to pity, be softened by our prayers and grant us that grace for which we ardently implore you.
(Mention your request)
Take from us all affliction and despair, all trials and misfortunes with which we are laden. For your sacred Infancy’s sake, hear our prayers and send us consolation and aid that we may praise you with the Father and the Holy Spirit forever and ever,
Amen
அற்புத குழந்தை இயேசுவே! அமைதியற்ற எங்கள் உள்ளங்களின் மேல் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளுமாறு தாழ்ந்து, பணிந்து, வணங்கி வேண்டுகிறோம். இரக்கமே உருவான உம் இனிய இதயம் கனிவோடு எங்கள் ஜெபத்தை ஏற்று உருக்கமாக நாங்கள் வேண்டும் வரத்தை அளித்தருளுமாறு உம்மை இறைஞ்சுகிறோம்.
( நமக்கு தேவையான வரங்களுக்காக மன்றாடுவோம் )
எங்களை வாட்டி வதைக்கும் துன்ப துயரங்களையும், வேதனை சோதனைகளையும் நீக்கி உமது பெயரால் எங்கள் மன்றாட்டை ஏற்றருளும். அதனால் உமது ஆறுதலையும் ஆதரவையும் பெற்று தந்தையோடும் தூய ஆவியாரோடும் உம்மை என்றென்றும் நாங்கள் வாழ்த்தி போற்றுவோமாக!